Income Tax (வருமான வரித்துறை ) Alert
Income Tax 2020: தெரியாமல் கூட "இதையெல்லாம்" செய்ய வேண்டாம்; வருமான வரித்துறை எச்சரிக்கை! மீறினால்?
நம்பினால் நம்புங்கள்! ஒவ்வொரு ஆண்டும் உங்களையும் எங்களையும் போன்ற சாதாரண மாத சம்பளக்காரர்கள் சிலர் தங்களது பணத்தை இழக்கிறார்கள். அதற்கு காரணம் - ஐடி துறையிலிருந்து வந்ததாகக் கூறப்படும் போலி மெசேஜ்கள் அல்லது போலியான வருமானத்துறை வலைத்தளங்கள் அல்லது போலியான இன்கம் டாக்ஸ் இமெயில் ஐடிகள் தான். பொதுமக்கள் இதுபோன்ற ஃபிஷிங் மோசடிகளில் (Phishing) சிக்கிக்கொள்ளாமல் இருக்க, வருமான வரித்துறை ஆனது ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டியே அனைத்து அதிகாரப்பூர்வ டொமைன்களின் பெயர்களையும் வெளியிடுகிறது. அந்த டொமைன்களில் இருந்து தான் குடிமக்களுக்கு அறிவிப்புகள், ஆலோசனைகள், ரசீதுகள், ஐடிஆர் ஒப்புதல்கள் மற்றும் பிற தகவல்தொடர்புகள் அனுப்பப்படும்.
ஆக வருமான வரித்துறையிலிருந்து வரும் ஏதேனும் ஒரு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சலைத் திறப்பதற்கு முன், அது சரியான இடத்திலிருந்து அனுப்பப்பட்டதா அல்லது போலியானதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக உங்களுக்கு கிடைக்கும் எஸ்எம்எஸ், இமெயில் ஐடி அல்லது வலைதள இணைப்பில் எழுத்துப்பிழைகள் மற்றும் புள்ளியின் நிலை ஆகியவற்றை சரிபார்க்கவும். அதெப்படி சரிபார்ப்பது என்று கேட்பவர்களுக்கு, இதோ அதிகாரப்பூர்வ டொமைன்கள், இமெயில் ஐடிகள் மற்றும் எஸ்எம்எஸ் குறியீடுகள்!
அதிகாரப்பூர்வ வலைத்தளங்களின் பெயர்கள்:
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.incometaxindia.gov.in
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.incometaxindiaefiling.gov.in
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.tdscpc.gov.in
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.insight.gov.in
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.nsdl.co.in
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.utiitsl.com
அதிகாரபூர்வமான இமெயில் விலாசங்கள்:
இமெயில் விலாசம் - “@incometax.gov.in”
இமெயில் விலாசம் - “@incometaxindiaefiling.gov.in”
இமெயில் விலாசம் - “@tdscpc.gov.in”
இமெயில் விலாசம் - “@cpc.gov.in”
இமெயில் விலாசம் - “@insight.gov.in”
இமெயில் விலாசம் - “nsdl.co.in”
இமெயில் விலாசம் - “utiitsl.com”
அதிகாரபூர்வமான எஸ்எம்எஸ் குறியீடுகள்:
“ITDEPT” என்று எஸ்எம்எஸ் வரும்.
“ITDEFL” என்று எஸ்எம்எஸ் வரும்.
"TDSCPC” என்று எஸ்எம்எஸ் வரும்.
“ITDCPC” என்று எஸ்எம்எஸ் வரும்.
“CMCPCI” என்று எஸ்எம்எஸ் வரும்.
“INSIGT” என்று எஸ்எம்எஸ் வரும்.
“SBICMP” என்று எஸ்எம்எஸ் வரும்.
“NSDLTN” என்று எஸ்எம்எஸ் வரும்.
“NSDLDP” என்று எஸ்எம்எஸ் வரும்.
“UTIPAN” என்று எஸ்எம்எஸ் வரும்.