NMMS History Quiz Bank 125 questions

NMMS & TNPSC History Quiz Bank - Class 7

Class 7 History MCQ Bank (Bilingual)

Comprehensive Study Material for NMMS, TNTET & TNPSC

ஏழாம் வகுப்பு வரலாறு - வினாடி வினா தொகுப்பு

Theme 1: Sources of Medieval India / இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

1. Which period is known as the Medieval Indian History?
1. எந்த காலத்தை இடைக்கால இந்திய வரலாறு என்று அழைக்கிறோம்?
A) 700 AD to 1200 AD and 1200 AD to 1700 AD கி.பி. 700 முதல் 1200 மற்றும் கி.பி. 1200 முதல் 1700 வரை
B) 500 AD to 1000 AD கி.பி. 500 முதல் 1000 வரை
C) 300 BC to 300 AD கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
D) 1700 AD to 1947 AD கி.பி. 1700 முதல் 1947 வரை
Answer: A / விடை: A
2. Who is Khafi Khan?
2. காஃபிகான் என்பவர் யார்?
A) Court poet of Akbar அக்பரின் அவைப் புலவர்
B) Historian in Aurangzeb's court ஔரங்கசீப்பின் அவையில் இருந்த வரலாற்று அறிஞர்
C) Commander of Shivaji சிவாஜியின் படைத்தளபதி
D) A Sufi Saint ஒரு சூஃபி ஞானி
Answer: B / விடை: B
3. What are the sources that help reconstruct the past called?
3. கடந்த காலத்தை மறுக்கட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) Inscriptions கல்வெட்டுகள்
B) Coins நாணயங்கள்
C) Sources சான்றுகள்
D) Literature இலக்கியங்கள்
Answer: C / விடை: C
4. Primary sources are information obtained from?
4. முதல்நிலைச் சான்றுகள் என்பவை எதிலிருந்து கிடைக்கப் பெறும் செய்திகள்?
A) Literature இலக்கியங்கள்
B) Travelogues பயணக்குறிப்புகள்
C) Biographies சுயசரிதைகள்
D) Inscriptions, monuments, coins பொறிப்புகள், நினைவுச்சின்னங்கள், நாணயங்கள்
Answer: D / விடை: D
5. Secondary sources are information obtained from?
5. இரண்டாம் நிலைச் சான்றுகள் என்பவை எதிலிருந்து கிடைக்கப் பெறும் செய்திகள்?
A) Coins நாணயங்கள்
B) Literature, chronicles, travelogues இலக்கியங்கள், காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள், பயணக்குறிப்புகள்
C) Inscriptions கல்வெட்டுகள்
D) Excavated items அகழ்வாராய்ச்சிப் பொருட்கள்
Answer: B / விடை: B
6. Whom does the "Thiruvalangadu Copper Plates" mention?
6. "திருவாலங்காடு செப்பேடு" யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
A) Rajaraja Chola I முதலாம் ராஜராஜ சோழன்
B) Rajendra Chola I முதலாம் ராஜேந்திர சோழன்
C) Sundara Chola சுந்தரச் சோழன்
D) Parantaka Chola பராந்தகச் சோழன்
Answer: B / விடை: B
7. Whom does the "Anbil Copper Plates" mention?
7. "அன்பில் செப்பேடு" யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
A) Rajendra Chola ராஜேந்திர சோழன்
B) Karikala Chola கரிகால சோழன்
C) Sundara Chola சுந்தரச் சோழன்
D) Kulothunga Chola குலோத்துங்க சோழன்
Answer: C / விடை: C
8. Which inscription describes the village administration of the Cholas?
8. சோழர் காலத்தில் கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்து கூறும் கல்வெட்டு எது?
A) Mangulam Inscription மாங்குளம் கல்வெட்டு
B) Uttaramerur Inscription உத்திரமேரூர் கல்வெட்டு
C) Thiruvalangadu Inscription திருவாலங்காடு கல்வெட்டு
D) Anbil Inscription அன்பில் கல்வெட்டு
Answer: B / விடை: B
9. What were the lands gifted to Brahmins by Chola kings called?
9. சோழ அரசர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A) Vellanvagai வேளாண்வகை
B) Devadana தேவதானம்
C) Brahmadeya பிரம்மதேயம்
D) Pallichchandam பள்ளிச்சந்தம்
Answer: C / விடை: C
10. What were the lands for non-Brahmins in the Chola kingdom called?
10. சோழ அரசில் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கான நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A) Shalabhoga சாலபோகம்
B) Brahmadeya பிரம்மதேயம்
C) Vellanvagai வேளாண்வகை
D) Pallichchandam பள்ளிச்சந்தம்
Answer: C / விடை: C
11. What were the lands granted for the maintenance of educational institutions by Cholas called?
11. சோழ அரசர்களால் கல்வி நிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A) Pallichchandam பள்ளிச்சந்தம்
B) Devadana தேவதானம்
C) Shalabhoga சாலபோகம்
D) Brahmadeya பிரம்மதேயம்
Answer: C / விடை: C
12. What were the lands gifted to temples by Chola kings called?
12. சோழ அரசர்களால் கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A) Devadana தேவதானம்
B) Pallichchandam பள்ளிச்சந்தம்
C) Shalabhoga சாலபோகம்
D) Vellanvagai வேளாண்வகை
Answer: A / விடை: A
13. What were the lands donated to Jain institutions by Cholas called?
13. சோழ அரசர்களால் சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A) Shalabhoga சாலபோகம்
B) Brahmadeya பிரம்மதேயம்
C) Pallichchandam பள்ளிச்சந்தம்
D) Devadana தேவதானம்
Answer: C / விடை: C
14. Who introduced a new style of architecture?
14. புது வகையான கட்டடக்கலையை அறிமுகம் செய்தவர்கள் யார்?
A) Mughals முகலாயர்கள்
B) Delhi Sultans டெல்லி சுல்தான்கள்
C) Marathas மராத்தியர்கள்
D) Vijayanagara Kings விஜயநகர அரசர்கள்
Answer: B / விடை: B
15. What are the main features of Delhi Sultanate architecture?
15. டெல்லி சுல்தானின் கட்டடக்கலையின் முக்கியக் கூறுகள் எவை?
A) Carved pillars செதுக்கப்பட்ட தூண்கள்
B) Arches, domes, and minarets வளைவுகள், ஒடுங்கிய வடிவக் கோபுரங்கள், குவிமாடங்கள்
C) Flat roofs தட்டையான கூரைகள்
D) Brick walls செங்கல் சுவர்கள்
Answer: B / விடை: B
16. Which sources help understand the cultural evolution centered around religion in North India?
16. வடஇந்தியாவில் சமயத்தை மையமாகக் கொண்ட பண்பாட்டின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்ள உதவும் சான்றுகள் எவை?
A) Khajuraho, Dilwara, Konark கஜுராகோ, தில்வாரா, கொனாரக்
B) Thanjavur, Darasuram தஞ்சாவூர், தாராசுரம்
C) Hampi, Madurai ஹம்பி, மதுரை
D) Agra, Gwalior ஆக்ரா, குவாலியர்
Answer: A / விடை: A
17. What are the architectural evidences of the Later Cholas?
17. பிற்காலச் சோழர்களின் கட்டடக்கலைக்குச் சான்றுகள் எவை?
A) Khajuraho கஜுராகோ
B) Hampi, Virupaksha ஹம்பி, விருபாக்ஷா
C) Big Temple, Gangaikonda Cholapuram, Darasuram பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம்
D) Charminar சார்மினார்
Answer: C / விடை: C
18. What are the architectural evidences of the Vijayanagara rulers (15th century)?
18. விஜயநகர அரசர்களின் (15ஆம் நூற்றாண்டு) கட்டடக்கலைக்குச் சான்றுகள் எவை?
A) Darasuram Temple தாராசுரம் கோவில்
B) Vittala and Virupaksha temples at Hampi ஹம்பியிலுள்ள வித்தாலா, விருபாக்ஷா கோவில்
C) Khajuraho Temple கஜுராகோ கோவில்
D) Dilwara Temple தில்வாரா கோவில்
Answer: B / விடை: B
19. Which of the following is NOT an important mosque of the medieval period?
19. இடைக்காலத்தை சேர்ந்த முக்கிய மசூதிகளில் தவறானது எது?
A) Quwwat-ul-Islam Mosque குவ்வத் - உல் - இஸ்லாம் மசூதி
B) Jama Masjid ஜமா மசூதி
C) Charminar சார்மினார்
D) Gol Gumbaz கோல்கும்பாஸ்
Answer: D / விடை: D
20. Where is Fatehpur Sikri Dargah located?
20. பதேப்பூர் சிக்ரி தர்க்கா எங்கு அமைந்துள்ளது?
A) Hyderabad ஹைதராபாத்
B) Near Delhi டெல்லி அருகில்
C) Agra ஆக்ரா
D) Lahore லாகூர்
Answer: B / விடை: B
21. Which historically important fort is located in Aurangabad?
21. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகளில் ஒளரங்காபாத்தில் அமைந்திருப்பது எது?
A) Agra Fort ஆக்ரா கோட்டை
B) Gwalior Fort குவாலியர் கோட்டை
C) Daulatabad தௌலதாபாத்
D) Chittor Fort சித்தூர் கோட்டை
Answer: C / விடை: C
22. Where is Feroz Shah Kotla located?
22. ஃபிரோஷ் ஷா கொத்தளம் எங்கு அமைந்துள்ளது?
A) Gwalior குவாலியர்
B) Rajasthan ராஜஸ்தான்
C) Delhi டெல்லி
D) Agra ஆக்ரா
Answer: C / விடை: C
23. What are the symbols of Rajput greatness?
23. ராஜபுத்திரர்களின் மேன்மைக்கான அடையாளங்கள் எவை?
A) Taj Mahal தாஜ்மஹால்
B) Palaces of Jaipur, Jaisalmer, Jodhpur ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர் அரண்மனைகள்
C) Agra Fort ஆக்ரா கோட்டை
D) Delhi Red Fort டெல்லி செங்கோட்டை
Answer: B / விடை: B
24. What are the treasure troves of evidence for medieval Indian history?
24. இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலங்கள் எவை?
A) Agra and Delhi ஆக்ரா மற்றும் டெல்லி
B) Firozabad, Tughlaqabad in North India & Hampi in South India வடஇந்தியாவில் பிரோஷாபாத், துக்ளகாபாத் மற்றும் தென் இந்தியாவில் ஹம்பி
C) Thanjavur and Gangaikonda Cholapuram தஞ்சாவூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம்
D) Khajuraho and Konark கஜுராகோ மற்றும் கொனாரக்
Answer: B / விடை: B
25. Who stamped the figure of Goddess Lakshmi and his name on his gold coins?
25. தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான லட்சுமியின் வடிவமும், தன் பெயரையும் பொறிக்க செய்தவர் யார்?
A) Iltutmish இல்துமிஷ்
B) Muhammad Ghori முகமது கோரி
C) Alauddin Khalji அலாவுதீன் கில்ஜி
D) Babur பாபர்
Answer: B / விடை: B
26. Who introduced the silver coin named Tanka?
26. டங்கா எனும் வெள்ளி நாணயத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
A) Babur பாபர்
B) Muhammad Ghori முகமது கோரி
C) Iltutmish இல்துமிஷ்
D) Alauddin Khalji அலாவுதீன் கில்ஜி
Answer: C / விடை: C
27. One Jital is equal to how many silver grains (Kundrimani)?
27. ஒரு ஜிட்டல் என்பது எத்தனை குன்றிமணிகளைக் கொண்டது?
A) 2.6 silver grains 2.6 வெள்ளி குன்றிமணி
B) 3.6 silver grains 3.6 வெள்ளி குன்றிமணி
C) 4.6 silver grains 4.6 வெள்ளி குன்றிமணி
D) 1.6 silver grains 1.6 வெள்ளி குன்றிமணி
Answer: B / விடை: B
28. 48 Jitals are equal to?
28. 48 ஜிட்டல்கள் எதற்கு சமமாகும்?
A) 1 Silver Tanka 1 வெள்ளி டங்காவுக்கு
B) 1 Gold Coin 1 தங்க நாணயத்திற்கு
C) 1 Copper Coin 1 செப்பு நாணயத்திற்கு
D) 2 Silver Tankas 2 வெள்ளி டங்காவுக்கு
Answer: A / விடை: A

Theme 2: Bhakti Movement & Literature / பக்தி இலக்கியங்கள் மற்றும் பயணக்குறிப்புகள்

29. Which period is known as the period of Bhakti literature?
29. பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுவது எது?
A) Pallava period பல்லவர்களின் காலம்
B) Pandya period பாண்டியர்களின் காலம்
C) Chola period சோழர்களின் காலம்
D) Chera period சேரர்களின் காலம்
Answer: C / விடை: C
30. Where did the Bhakti movement first originate?
30. பக்தி இயக்கங்கள் முதலில் எங்கு தோன்றியது?
A) North India வட இந்தியா
B) East India கிழக்கு இந்தியா
C) South India தென்னிந்தியா
D) West India மேற்கு இந்தியா
Answer: C / விடை: C
31. Who compiled the Nalayira Divya Prabandham?
31. நாலாயிர திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
A) Sekkizhar சேக்கிழார்
B) Nathamuni நாதமுனி
C) Nambiyandar Nambi நம்பியாண்டார் நம்பி
D) Manikkavasagar மாணிக்கவாசகர்
Answer: B / விடை: B
32. Jayadeva's 'Gita Govindam' (12th century) is a continuation of which tradition?
32. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெயதேவரின் 'கீதகோவிந்தம்' எதன் தொடர்ச்சியாகும்?
A) North Indian Bhakti tradition வடஇந்திய பக்தி மரபு
B) South Indian Bhakti tradition தென்னிந்திய பக்தி இலக்கிய மரபு
C) Islamic tradition இஸ்லாமிய மரபு
D) Sufi tradition சூஃபி மரபு
Answer: B / விடை: B
33. Who was inspired by the Bhakti movement in the 15th century?
33. 15ம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தால் கவரப் பெற்றவர் யார்?
A) Jayadeva ஜெயதேவர்
B) Tulsidas துளசிதாசர்
C) Kabir Das கபீர்தாஸ்
D) Mirabai மீராபாய்
Answer: C / விடை: C
34. Which book was written by Krishnadevaraya?
34. கிருஷ்ணதேவராயர் எழுதிய நூல் எது?
A) Madura Vijayam மதுராவிஜயம்
B) Amuktamalyada ஆமுக்த மால்யதா
C) Rajatarangini ராஜதரங்கணி
D) Gita Govindam கீதகோவிந்தம்
Answer: B / விடை: B
35. Who wrote 'Prithviraj Raso' that portrays the courage of Rajput kings?
35. ராஜபுத்திர அரசர்களின் மனத்துணிச்சலைப் படம்பிடித்துக் காட்டும் 'பிருதிவிராஜ ராசோ' என்ற நூலை எழுதியவர் யார்?
A) Kalhana கல்ஹணர்
B) Chand Bardai சந்த்பார்தை
C) Jayadeva ஜெயதேவர்
D) Gangadevi கங்காதேவி
Answer: B / விடை: B
36. Which book by Kalhana speaks about the pre-Islamic period?
36. இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து கூறும் கல்ஹணரின் நூல் எது?
A) Amuktamalyada ஆமுக்த மால்யதா
B) Prithviraj Raso பிருதிவிராஜ ராசோ
C) Rajatarangini ராஜதரங்கணி (11ஆம் நூற்றாண்டு)
D) Madura Vijayam மதுராவிஜயம்
Answer: C / விடை: C
37. Who wrote the book 'Tabaqat-i-Nasiri'?
37. 'தபகத்-இ-நஸிரி' எனும் நூலை எழுதியவர் யார்?
A) Minhaj-us-Siraj மின்கஜ் உஸ் சிராஜ்
B) Hasan Nizami ஹசன் நிஜாமி
C) Zia-ud-din Barani ஜியா-உத்-பரணி
D) Abul Fazl அபுல்பாசல்
Answer: A / விடை: A
38. What is the meaning of the Arabic word "Tabaqat"?
38. "தபகத்" என்ற அரேபியச்சொல்லின் பொருள் என்ன?
A) History வரலாறு
B) Autobiography சுயசரிதை
C) Generations or centuries தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள்
D) Government அரசாங்கம்
Answer: C / விடை: C
39. Who wrote 'Taj-ul-Ma'asir', the first officially sanctioned book on the history of the Delhi Sultanate?
39. டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற முதல் நூலான 'தாஜ்-உல்-மா-அசிர்' ஐ எழுதியவர் யார்?
A) Minhaj-us-Siraj மின்கஜ் உஸ் சிராஜ்
B) Hasan Nizami ஹசன் நிஜாமி
C) Zia-ud-din Barani ஜியா-உத்-பரணி
D) Firishta பெரிஷ்டா
Answer: B / விடை: B
40. Who authored the book "Tarikh-i-Firoz Shahi"?
40. "தாரிக்-இ-பிரோஷாகி" எனும் நூலைப் படைத்தவர் யார்?
A) Zia-ud-din Barani ஜியா-உத்-பரணி
B) Hasan Nizami ஹசன் நிஜாமி
C) Minhaj-us-Siraj மின்கஜ் உஸ் சிராஜ்
D) Abul Fazl அபுல்பாசல்
Answer: A / விடை: A
41. Who is the author of 'Tarikh-i-Firishta', which describes the rise of Mughal rule in India?
41. இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கும் 'தாரிக்-இ-பெரிஷ்டா' என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) Abul Fazl அபுல்பாசல்
B) Nizamuddin Ahmad நிஜாமுதீன் அகமத்
C) Firishta பெரிஷ்டா (16ம் நூற்றாண்டு)
D) Zia-ud-din Barani ஜியா-உத்-பரணி
Answer: C / விடை: C
42. What is the meaning of the Arabic word 'Tariq' or 'Tahquiq'?
42. தாரிக் (Tariq) அல்லது தாகுயுக் (Tahquiq) என்ற அரேபியச்சொல்லின் பொருள் என்ன?
A) Autobiography சுயசரிதை
B) History வரலாறு
C) Generations தலைமுறைகள்
D) Chronology காலவரிசை
Answer: B / விடை: B
43. What is the meaning of the Persian word "Tuzuk"?
43. "தஜுக்" (Tuzuk) என்ற பாரசீகச்சொல்லின் பொருள் என்ன?
A) History வரலாறு
B) Autobiography சுயசரிதை
C) Centuries நூற்றாண்டுகள்
D) Decree அரசாணை
Answer: B / விடை: B
44. Who is the author of books like Ain-i-Akbari and Akbar Nama?
44. அயினி அக்பர், அக்பர் நாமா போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
A) Abul Fazl அபுல்பாசல்
B) Nizamuddin Ahmad நிஜாமுதீன் அகமத்
C) Babur பாபர்
D) Jahangir ஜஹாங்கீர்
Answer: A / விடை: A
45. What is the name of the autobiography written by Jahangir?
45. ஜஹாங்கீர் எழுதிய சுயசரிதை நூலின் பெயர் என்ன?
A) Babur Nama பாபர் நாமா
B) Akbar Nama அக்பர் நாமா
C) Tuzuk-i-Jahangiri தசுக்-இ-ஜஹாங்கிரி
D) Tabaqat-i-Akbari தபகத்-இ-அக்பரி
Answer: C / விடை: C
46. Which book was written by Badauni?
46. பதானி எழுதிய நூல் எது?
A) Akbar Nama அக்பர் நாமா
B) Tarikh-i-Badauni (History of Badauni) தாரிக்-இ-பதானி (பதானியின் வரலாறு)
C) Babur Nama பாபர் நாமா
D) Rihla ரிக்ளா
Answer: B / விடை: B
47. Which book frankly describes Akbar's rule and religious policy?
47. அக்பரின் ஆட்சி பற்றியும், மதக்கொள்கை பற்றியும் ஒளிவுமறைவின்றி கூறும் நூல் எது?
A) Akbar Nama அக்பர் நாமா
B) Ain-i-Akbari அயினி அக்பர்
C) Tarikh-i-Badauni தாரிக்-இ-பதானி
D) Tahquiq-i-Hind தாகுயுக்-இ-ஹிந்த்
Answer: C / விடை: C
48. In which district is Kayal (Kayalpatnam) located?
48. காயல் (காயல் பட்டினம்) எந்த மாவட்டத்தில் உள்ளது?
A) Tirunelveli திருநெல்வேலி
B) Thoothukudi தூத்துக்குடி
C) Kanyakumari கன்னியாகுமரி
D) Ramanathapuram இராமநாதபுரம்
Answer: B / விடை: B
49. Which foreign traveler visited the town of "Kayal" twice during the Pandya reign?
49. பாண்டிய அரசின் காலத்தில் "காயல்" எனும் ஊருக்கு இருமுறை வந்த வெளிநாட்டுப் பயணி யார்?
A) Ibn Battuta இபின் பதூதா
B) Marco Polo (Venice) மார்க்கோபோலோ (வெனிஸ் நகரம்)
C) Niccolo de Conti நிகோலா கோண்டி
D) Abdur Razzaq அப்துர் ரசாக்
Answer: B / விடை: B
50. According to Marco Polo, from where were thousands of horses imported into South India by sea?
50. எங்கிருந்து ஆயிரக்கணக்கில் குதிரைகள் தென்னிந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக மார்க்கோபோலோ குறிப்பிடுகின்றார்?
A) Arabia, Persia அரேபியா, பாரசீகம்
B) China, Japan சீனா, ஜப்பான்
C) Europe, Africa ஐரோப்பா, ஆப்பிரிக்கா
D) Egypt, Morocco எகிப்து, மொராக்கோ
Answer: A / விடை: A
51. Who came to India with Mahmud of Ghazni during his invasion?
51. கஜினி மாமூதின் படையெடுப்பின் போது அவருடன் இந்தியாவிற்கு வந்தவர் யார்?
A) Ibn Battuta இபின் பதூதா
B) Marco Polo மார்க்கோபோலோ
C) Al-Biruni அல்-பரூனி (11ஆம் நூற்றாண்டு)
D) Niccolo de Conti நிகோலா கோண்டி
Answer: C / விடை: C
52. Who gave accurate information about Mahmud of Ghazni's Somnath expedition?
52. கஜினி மாமூதின் சோமநாதபுரப் படையெடுப்பின் துல்லியமான தகவல்களைக் கொடுத்தவர் யார்?
A) Marco Polo மார்க்கோபோலோ
B) Ibn Battuta இபின் பதூதா
C) Al-Biruni அல்-பரூனி
D) Pliny பிளைனி
Answer: C / விடை: C
53. In which book did Al-Biruni discuss Indian conditions, systems of knowledge, social norms, and religion?
53. அல்பரூனி எந்த நூலில் இந்தியாவின் நிலைகளையும் அறிவு முறையினையும் சமூக விதிகளையும், மதத்தையும் குறித்து விவாதித்துள்ளார்?
A) Rihla ரிக்ளா
B) Tahquiq-i-Hind தாகுயுக்-இ-ஹிந்த்
C) Tarikh-i-Badauni தாரிக்-இ-பதானி
D) Babur Nama பாபர் நாமா
Answer: B / விடை: B
54. To which country did Ibn Battuta belong?
54. இபின் பதூதா எந்த நாட்டைச் சார்ந்தவர்?
A) Italy இத்தாலி
B) Portugal போர்ச்சுகல்
C) Morocco (Arab-born scholar) அரேபியாவில் பிறந்த மொராக்கோ நாட்டு அறிஞர்
D) China சீனா
Answer: C / விடை: C
55. To which century did Ibn Battuta belong?
55. இபின் பதூதா எந்த நூற்றாண்டை சார்ந்தவர்?
A) 11th century 11 ஆம் நூற்றாண்டு
B) 12th century 12 ஆம் நூற்றாண்டு
C) 13th century 13 ஆம் நூற்றாண்டு
D) 14th century 14 ஆம் நூற்றாண்டு
Answer: D / விடை: D
56. Which travelogue written by Ibn Battuta contains details about the countries and people he visited?
56. இபின்பதூதா எழுதிய எந்த பயணநூல் அவர் பயணம் செய்த நாடுகள், மக்கள் பற்றிய விவரங்களை கூறுகிறது?
A) Rihla (Travels) ரிக்ளா (பயணங்கள்)
B) Tahquiq-i-Hind தாகுயுக்-இ-ஹிந்த்
C) Indica இண்டிகா
D) Periplus பெரிப்ளஸ்
Answer: A / விடை: A
57. During whose reign did Ibn Battuta come to Delhi?
57. இபின் பதூதா யாருடைய காலத்தில் டெல்லிக்கு வந்தார்?
A) Alauddin Khalji அலாவுதீன் கில்ஜி
B) Muhammad bin Tughlaq முகமது பின் துக்ளக்
C) Ghiyasuddin Tughlaq கியாசுதீன் துக்ளக்
D) Balban பால்பன்
Answer: B / விடை: B
58. Who shifted the capital from Delhi to Devagiri?
58. டெல்லியிலிருந்து தேவகிரிக்கு தலைநகரை மாற்றியவர் யார்?
A) Balban பால்பன்
B) Alauddin Khalji அலாவுதீன் கில்ஜி
C) Muhammad bin Tughlaq முகமது பின் துக்ளக்
D) Sikandar Lodi சிக்கந்தர் லோடி
Answer: C / விடை: C
59. Which foreign traveler visited the Vijayanagara kingdom in 1420?
59. 1420 ல் விஜயநகர அரசிற்கு வந்த வெளிநாட்டுப் பயணி யார்?
A) Niccolo de Conti (Italy) நிகோலா கோண்டி (இத்தாலி)
B) Abdur Razzaq அப்துர் ரசாக்
C) Domingo Paes டோமிங்கோ பயஸ்
D) Nuniz நுனிஸ்
Answer: A / விடை: A
60. Who came to Vijayanagara in 1443 from Herat in Central Asia?
60. 1443 ல் மத்திய ஆசியாவின் ஹீராட் நகரிலிருந்து விஜயநகரத்திற்கு வந்தவர் யார்?
A) Domingo Paes டோமிங்கோ பயஸ்
B) Niccolo de Conti நிகோலா கோண்டி
C) Abdur Razzaq அப்துர் ரசாக்
D) Marco Polo மார்க்கோபோலோ
Answer: C / விடை: C
61. Which Portuguese traveler visited Vijayanagara in 1522?
61. 1522 ல் விஜயநகருக்கு வருகை புரிந்த போர்ச்சுகீசிய பயணி யார்?
A) Niccolo de Conti நிகோலா கோண்டி
B) Domingo Paes டோமிங்கோ பயஸ் (போர்த்துக்கீசியர்)
C) Abdur Razzaq அப்துர் ரசாக்
D) Ibn Battuta இபின் பதூதா
Answer: B / விடை: B

Theme 3: The Rajputs & Palas / ராஜபுத்திரர்கள் மற்றும் பாலர்கள்

62. Who erected the "Jaya Stambha" (Pillar of Victory) in Chittor?
62. சித்தூரில் உள்ள "ஜெய ஸ்தம்பா" எனும் வெற்றித்தூணை நிறுவியவர் யார்?
A) Rana Pratap ராணா பிரதாப்
B) Rana of Chittor சித்தூரின் ராணா (அரசர்)
C) Shivaji சிவாஜி
D) Akbar அக்பர்
Answer: B / விடை: B
63. Who established a powerful Rajput kingdom in the western parts of India?
63. இந்தியாவின் மேற்கு பகுதிகளில் வலிமை மிக்க இராஜபுத்திர அரசினை நிறுவியவர்கள் யார்?
A) Palas பாலர்கள்
B) Pratiharas பிரதிகாரர்கள்
C) Chauhans சௌகான்கள்
D) Solankis சோலங்கிகள்
Answer: B / விடை: B
64. Who established a powerful Rajput kingdom in the eastern parts of India?
64. இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வலிமை மிக்க இராஜபுத்திர அரசினை நிறுவியவர்கள் யார்?
A) Pratiharas பிரதிகாரர்கள்
B) Palas பாலர்கள்
C) Tomaras தோமர்கள்
D) Chandelas சண்டேலர்கள்
Answer: B / விடை: B
65. When did the Arabs capture the Sind region?
65. சிந்துப்பகுதியை அராபியர்கள் எப்போது கைப்பற்றினர்?
A) 712 AD கி.பி. 712
B) 1001 AD கி.பி. 1001
C) 1192 AD கி.பி. 1192
D) 1526 AD கி.பி. 1526
Answer: A / விடை: A
66. Why did the history of Islam in India not begin immediately even after the Arabs captured Sind in 712 AD?
66. கி.பி. 712-ல் சிந்துப்பகுதியை அராபியர்கள் கைப்பற்றினாலும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் வரலாறு உடனடியாக தொடங்காததற்கு காரணம் என்ன?
A) Mughal opposition முகலாயர்களின் எதிர்ப்பு
B) Maratha invasion மராத்தியர்களின் படையெடுப்பு
C) Resistance of Rajput (Kannauj) kings ராஜபுத்திர (கன்னோஜ்) அரசர்களின் எதிர்ப்பு
D) Intervention of South Indian kings தென்னிந்திய அரசர்களின் தலையீடு
Answer: C / விடை: C
67. Who was the notable Rajput king (736 AD) among those who opposed the Arabs?
67. அராபியர்களை எதிர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க இராஜபுத்திர அரசர் (கி.பி. 736) யார்?
A) Harsha ஹர்ஷர்
B) Yasovarman யசோவர்மன்
C) Prithviraj பிருதிவிராஜ்
D) Dharmapala தர்மபாலர்
Answer: B / விடை: B
68. When did the Islamic period begin in India?
68. இஸ்லாமியர்களின் காலகட்டம் இந்தியாவில் எப்போது தொடங்கியது?
A) 712 AD கி.பி. 712
B) 1000 AD கி.பி. 1000
C) 1200 AD கி.பி. 1200
D) 1526 AD கி.பி. 1526
Answer: C / விடை: C
69. The word 'Rajput' is derived from which language?
69. "ராஜ்புத்" எனும் சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்?
A) Arabic அரபு
B) Urdu உருது
C) Sanskrit (Rajputra) சமஸ்கிருதம் ("ராஜ்புத்ர")
D) Persian பாரசீகம்
Answer: C / விடை: C
70. What is the meaning of 'Rajput'?
70. "ராஜ்புத்" என்பதன் பொருள் என்ன?
A) Warrior போர்வீரன்
B) Scion of the royal blood அரசவம்ச ரத்தத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல்
C) Landowner நிலத்தின் சொந்தக்காரன்
D) Heir of the minister அமைச்சரின் வாரிசு
Answer: B / விடை: B
71. After whose death did various Rajput clans establish their kingdoms in many parts of North and Central India?
71. யாருடைய மறைவிற்குப் பின் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு ராஜபுத்திர இனக்குழுக்கள் தங்கள் அரசுகளை நிறுவிக் கொண்டனர்?
A) Ashoka அசோகர்
B) Chandragupta சந்திரகுப்தர்
C) Kanishka கனிஷ்கர்
D) Harsha ஹர்சர்
Answer: D / விடை: D
72. Which of the following is NOT one of the three most important Rajput clans?
72. ராஜபுத்திர அரச வம்சத்தின் மிக முக்கியமான மூன்று குலங்களில் பொருந்தாதது எது?
A) Surya Kula சூரிய வம்சி
B) Chandra Kula சந்திரவம்சி
C) Agni Kula அக்னி குலம்
D) Vayu Kula வாயு குலம்
Answer: D / விடை: D
73. Who were the prominent Rajputs claiming descent from Surya Kula and Chandra Kula?
73. சூரியகுல, சந்திரகுல வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்ளும் ராஜபுத்திரர்களுள் முக்கியமானவர்கள் யார்?
A) Chandelas of Bundelkhand பந்தேல்கண்டின் சந்தேலர்கள்
B) Chauhans சௌகான்கள்
C) Pratiharas பிரதிகாரர்கள்
D) Tomaras தோமரர்கள்
Answer: A / விடை: A
74. Which of the following clans did NOT claim to be descendants of Agni Kula?
74. கீழ்க்கண்டவர்களில் தங்களை 'அக்னி குல தோன்றல்கள்' என கூறிக் கொள்ளாத மரபினர் யார்?
A) Pratiharas பிரதிகாரர்கள்
B) Chauhans சௌகான்கள்
C) Paramaras of Pawar பவாரைச் சேர்ந்த பரமாரர்கள்
D) Chandelas சந்தேலர்கள்
Answer: D / விடை: D
75. Which region did the Tomaras rule?
75. தோமரர்கள் எப்பகுதியை ஆட்சி செய்தனர்?
A) Gujarat குஜராத்
B) Haryana ஹரியானா
C) Punjab பஞ்சாப்
D) Maharashtra மகாராஷ்டிரா
Answer: B / விடை: B
76. Who defeated the Tomaras in the 12th century?
76. 12ஆம் நூற்றாண்டில் தோமரர்களை தோற்கடித்தவர்கள் யார்?
A) Pratiharas பிரதிகாரர்கள்
B) Palas பாலர்கள்
C) Chauhans சௌகான்கள்
D) Solankis சோலங்கிகள்
Answer: C / விடை: C
77. Who listed 36 important Rajput clans in 1829?
77. கி.பி. 1829 இல் முக்கியமான 36 ராஜபுத்திர அரச குலங்களைப் பட்டியலிட்டவர் யார்?
A) James Tod ஜேம்ஸ்டாட்
B) Vincent Smith வின்சென்ட் ஸ்மித்
C) Cunningham கன்னிங்காம்
D) John Marshall ஜான் மார்ஷல்
Answer: A / விடை: A
78. From where did the Pratiharas (or Gurjara Pratiharas) rule?
78. பிரதிகாரர்கள் (அ) கூர்ஜரப் பிரதிகாரர்கள் எங்கிருந்து ஆட்சி புரிந்தனர்?
A) Kannauj கன்னோஜ்
B) Gurjaratra (in Jodhpur) கூர்ஜராட்டிரா (ஜோத்பூரில் உள்ளது)
C) Ujjain உஜ்ஜயினி
D) Delhi டெல்லி
Answer: B / விடை: B
79. Who laid the foundation of the Gurjara dynasty in the 6th century AD?
79. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் கூர்ஜர அரசவம்சத்தின் அடிக்கல்லை நாட்டியவர் யார்?
A) Harichandra ஹரிச்சந்திரா
B) Nagabhata I முதலாம் நாகபட்டர்
C) Vatsaraja வத்சராஜா
D) Ramabhadra ராமபத்ரா
Answer: A / விடை: A
80. Who was the first and prominent ruler among the Pratihara kings?
80. பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் யார்?
A) Harichandra ஹரிச்சந்திரா
B) Vatsaraja வத்சராஜா
C) Nagabhata I முதலாம் நாகபட்டர்
D) Mihira Bhoja மிகிரபோஜா
Answer: C / விடை: C
81. Who repulsed the Arab invasion of Sind?
81. சிந்துவின் மீது அராபியர் மேற்கொண்ட படையெடுப்பை முறியடித்தவர் யார்?
A) Vatsaraja வத்சராஜா
B) Nagabhata I முதலாம் நாகபட்டர்
C) Ramabhadra ராமபத்ரா
D) Gopala கோபாலர்
Answer: B / விடை: B
82. Who succeeded Nagabhata I and wished to establish his supremacy over the whole of North India?
82. முதலாம் நாகபட்டருக்கு பின் ஆட்சி செய்து, ஒட்டுமொத்த வட இந்தியாவின் மேல் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்டவர் யார்?
A) Dharmapala தர்மபாலர்
B) Gopala கோபாலர்
C) Vatsaraja வத்சராஜா
D) Devapala தேவபாலர்
Answer: C / விடை: C
83. Which of the following dynasties did NOT try to establish their supremacy over the prosperous Kannauj?
83. வளம் நிறைந்த கன்னோஜின் மீது மேலாதிக்கத்தை நிறுவ முயன்றவர்களில் பொருந்தாதவர் யார்?
A) Gurjara Pratiharas of Malwa மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள்
B) Rashtrakutas of the Deccan தக்காணத்தை சேர்ந்த ராஷ்டிரகூடர்கள்
C) Palas of Bengal வங்காளத்துப் பாலர்கள்
D) Pandyas of Madurai மதுரை பாண்டியர்கள்
Answer: D / விடை: D
84. Who was the founder of the Pala dynasty?
84. பால அரச வம்சத்தை உருவாக்கியவர் யார்?
A) Dharmapala தர்மபாலர்
B) Devapala தேவபாலர்
C) Gopala கோபாலர்
D) Mahipala மகிபாலர்
Answer: C / விடை: C
85. Which religion did Dharmapala patronize?
85. தர்மபாலர் எந்த மதத்தை ஆதரித்தார்?
A) Jainism சமணம்
B) Buddhism பௌத்தம்
C) Saivism சைவம்
D) Vaishnavism வைணவம்
Answer: B / விடை: B
86. Up to where did Devapala extend the power of the Palas in the east?
86. தேவபாலர், பாலர்களின் ஆட்சி அதிகாரத்தை எங்கு வரை விரிவுபடுத்தினார்?
A) Kannauj கன்னோஜ் வரை
B) Kamarupa (Assam) காமரூபம் (அஸ்ஸாம்) வரை
C) Odisha ஒடிசா வரை
D) Kashmir காஷ்மீர் வரை
Answer: B / விடை: B
87. Whose reigns were termed as the "most brilliant chapters in the history of Bengal" by historian R.C. Majumdar?
87. யாருடைய ஆட்சிக்காலங்கள் "வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள்" என வரலாற்றறிஞர் ஆர்.சி.மஜும்தார் கூறியுள்ளார்?
A) Gopala, Mahipala கோபாலர், மகிபாலர்
B) Dharmapala, Devapala தர்மபாலர், தேவபாலர்
C) Mahipala I, Ramapala முதலாம் மகிபாலர், ராமபாலர்
D) Simharaj, Prithviraj சிம்மராஜ், பிருதிவிராஜ்
Answer: B / விடை: B
88. Who is considered the founder of the Second Pala Dynasty and its most powerful ruler?
88. இரண்டாம் பால வம்சத்தை தோற்றுவித்தவர் (மற்றும் பால வம்சத்தின் மிகச்சிறந்த வலிமை மிக்க அரசர்) யார்?
A) Dharmapala தர்மபாலர்
B) Devapala தேவபாலர்
C) Mahipala I முதலாம் மகிபாலர்
D) Gopala கோபாலர்
Answer: C / விடை: C
89. Whose decline gave Mahipala the opportunity to play a leading role in North Indian politics?
89. யாருடைய வீழ்ச்சியானது மகிபாலருக்கு வடஇந்திய அரசியல் நிகழ்வுகளில் முதன்மையான பாத்திரத்தை வகிக்கும் வாய்ப்பை வழங்கியது?
A) Fall of Rashtrakutas ராஷ்டிரகூடர்களின் வீழ்ச்சி
B) Fall of Cholas சோழர்களின் வீழ்ச்சி
C) Fall of Pratiharas பிரதிகாரர்களின் வீழ்ச்சி
D) Fall of Chauhans சௌகான்களின் வீழ்ச்சி
Answer: C / விடை: C
90. Whose invasion prevented Mahipala I from expanding his power beyond Varanasi?
90. யாருடைய படையெடுப்பின் காரணமாக வாரணாசிக்கு அப்பால் முதலாம் மகிபாலரால் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த இயலவில்லை?
A) Mahmud of Ghazni கஜினி முகமது
B) Muhammad Ghori முகமது கோரி
C) Invasion of Rajendra Chola இராஜேந்திர சோழனின் படையெடுப்பு
D) Prithviraj Chauhan பிருதிவிராஜ் சௌகான்
Answer: C / விடை: C
91. Which dynasty succeeded the Pala dynasty?
91. பால வம்சத்திற்கு பின் வருகை புரிந்த வம்சம் எது?
A) Sena Dynasty சேனா வம்சம்
B) Solanki Dynasty சோலங்கி வம்சம்
C) Tomaras தோமர்கள்
D) Chandelas சந்தேலர்கள்
Answer: A / விடை: A
92. What was the ruling period of the Chauhans?
92. சௌகான்களின் ஆட்சி காலம் என்ன?
A) 700 AD to 1000 AD கி.பி. 700 முதல் 1000 வரை
B) 850 AD to 1100 AD கி.பி. 850 முதல் 1100 வரை
C) 956 AD to 1192 AD கி.பி. 956 முதல் 1192 வரை
D) 1206 AD to 1526 AD கி.பி. 1206 முதல் 1526 வரை
Answer: C / விடை: C
93. What was the capital of the Chauhans?
93. சௌகான்களின் தலைநகரம் எது?
A) Kannauj கன்னோஜ்
B) Shakambari (Rajasthan) சாகம்பரி (இராஜஸ்தான்)
C) Agra ஆக்ரா
D) Jaipur ஜெய்ப்பூர்
Answer: B / விடை: B
94. Who founded the Chauhan dynasty?
94. சௌகான்கள் என்ற வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
A) Prithviraj Chauhan பிருதிவிராஜ் சௌகான்
B) Harichandra ஹரிச்சந்திரா
C) Simharaji சிம்மராஜ்
D) Man Singh மான்சிங்
Answer: C / விடை: C
95. Who is known to have founded the city of Ajmer?
95. ஆஜ்மீர் நகரை தோற்றுவித்தவர் என அறியப்படுபவர் யார்?
A) Simharaji சிம்மராஜ்
B) Prithviraj பிருதிவிராஜ்
C) Nagabhata I முதலாம் நாகபட்டர்
D) Jayachandra ஜெயசந்திரன்
Answer: A / விடை: A
96. Who was the last and greatest ruler among the Chauhan kings?
96. சௌகான் அரசர்களில் கடைசி மற்றும் தலைசிறந்த அரசர் யார்?
A) Simharaji சிம்மராஜ்
B) Prithviraj Chauhan பிருதிவிராஜ் சௌகான்
C) Jayachandra ஜெயசந்திரன்
D) Harichandra ஹரிச்சந்திரா
Answer: B / விடை: B
97. Who stood by the Pratiharas during the Arab invasions?
97. அராபிய படையெடுப்பின்போது பிரதிகாரர்களோடு துணை நின்றவர்கள் யார்?
A) Palas பாலர்கள்
B) Solankis சோலங்கிகள்
C) Chauhans சௌகான்கள்
D) Paramaras பரமாரர்கள்
Answer: C / விடை: C
98. When did the First Battle of Tarain take place?
98. முதலாம் தரெய்ன் போர் எப்போது நடைபெற்றது?
A) 1191 AD கி.பி. 1191
B) 1192 AD கி.பி. 1192
C) 1001 AD கி.பி. 1001
D) 1526 AD கி.பி. 1526
Answer: A / விடை: A
99. Between whom was the First Battle of Tarain fought?
99. முதலாம் தரெய்ன் போர் யாருக்கிடையே நடைபெற்றது?
A) Prithviraj Chauhan & Mahmud of Ghazni பிருதிவிராஜ் சௌகான் மற்றும் கஜினி முகமது
B) Prithviraj Chauhan & Muhammad Ghori பிருதிவிராஜ் சௌகான் மற்றும் முகமது கோரி
C) Babur & Ibrahim Lodi பாபர் மற்றும் இப்ராஹிம் லோடி
D) Akbar & Hemu அக்பர் மற்றும் ஹேமு
Answer: B / விடை: B
100. Who won the First Battle of Tarain?
100. முதலாம் தரெய்ன் போரில் வெற்றி பெற்றவர் யார்?
A) Muhammad Ghori முகமது கோரி
B) Prithviraj Chauhan பிருதிவிராஜ் சௌகான்
C) Qutb-ud-din Aibak குத்புதீன் ஐபக்
D) Jayachandra ஜெயசந்திரன்
Answer: B / விடை: B
101. When did the Second Battle of Tarain take place?
101. இரண்டாம் தரெய்ன் போர் எப்போது நடைபெற்றது?
A) 1191 AD கி.பி. 1191
B) 1192 AD கி.பி. 1192
C) 1194 AD கி.பி. 1194
D) 1206 AD கி.பி. 1206
Answer: B / விடை: B
102. Who won the Second Battle of Tarain?
102. இரண்டாம் தரெய்ன் போரில் வெற்றி பெற்றவர் யார்?
A) Prithviraj Chauhan பிருதிவிராஜ் சௌகான்
B) Muhammad Ghori முகமது கோரி
C) Iltutmish இல்துமிஷ்
D) Man Singh மான்சிங்
Answer: B / விடை: B
103. In which battle was Prithviraj Chauhan defeated and killed?
103. எந்த போரில் பிருதிவிராஜ் சௌகான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்?
A) First Battle of Tarain முதலாம் தரெய்ன் போர்
B) Battle of Chandawar சந்தாவார் போர்
C) Second Battle of Tarain இரண்டாம் தரெய்ன் போர்
D) Battle of Panipat பானிபட் போர்
Answer: C / விடை: C
104. What are the examples of Rajput residential architecture?
104. ராஜபுத்திரர்களின் குடியிருப்புக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவை எவை?
A) Mansingh Palace (Gwalior), Amber Fort (Jaipur), Lake Palace (Udaipur) குவாலியரிலுள்ள மான்சிங் அரண்மனை, ஆம்பர் கோட்டை, உதய்பூர் அரண்மனை
B) Red Fort, Taj Mahal செங்கோட்டை, தாஜ்மஹால்
C) Charminar, Gol Gumbaz சார்மினார், கோல்கும்பாஸ்
D) Fatehpur Sikri பதேபூர் சிக்ரி
Answer: A / விடை: A
105. How many temples are there in Khajuraho (Bundelkhand)?
105. பந்தேல்கண்டில் உள்ள கஜுராஹோவில் எத்தனை கோவில்கள் உள்ளன?
A) 10 temples 10 கோவில்கள்
B) 20 temples 20 கோவில்கள்
C) 30 temples 30 கோவில்கள்
D) 40 temples 40 கோவில்கள்
Answer: C / விடை: C
106. Where are the 16 Hindu and Jain temples of the Rajput era located?
106. இராஜபுத்திர காலத்து 16 இந்து மற்றும் சமணக்கோவில்கள் எங்கு உள்ளன?
A) Khajuraho கஜுராஹோ
B) Osian (32 miles from Jodhpur) ஒசியான் (ஜோத்பூரிலிருந்து 32 மைல் தொலைவிலுள்ளது)
C) Agra ஆக்ரா
D) Jaipur ஜெய்ப்பூர்
Answer: B / விடை: B
107. What is the hall of the Jain temple at Mount Abu made of?
107. அபுகுன்றின் மேலுள்ள சமண கோவிலில் எந்த கற்களால் கட்டப்பட்ட கூடம் உள்ளது?
A) Red sandstone சிவப்பு மணற்கற்கள்
B) Granite கருங்கல்
C) White marble வெண்மை நிற சலவை கற்கள்
D) Marble பளிங்கு கற்கள்
Answer: C / விடை: C
108. Which religion did the Palas follow?
108. பாலர்கள் எம்மதத்தை பின்பற்றியவர்கள்?
A) Hinayana Buddhism ஹீனயான பௌத்தம்
B) Mahayana Buddhism மகாயான பௌத்தம்
C) Jainism சமணம்
D) Saivism சைவம்
Answer: B / விடை: B
109. Where was Buddhism established through Pala missionaries?
109. பாலர்களின் சமய பரப்பாளர்கள் மூலம் எங்கு பௌத்தம் நிறுவப்பட்டது?
A) China சீனா
B) Japan ஜப்பான்
C) Sri Lanka இலங்கை
D) Tibet திபெத்தில்
Answer: D / விடை: D
110. Who reformed Tibetan Buddhism?
110. திபெத்திய பௌத்தத்தை சீர்திருத்தம் செய்தவர் யார்?
A) Atisha அதிசா
B) Dharmapala தர்மபாலர்
C) Buddhaghosa புத்தகோஷர்
D) Nagarjuna நாகார்ஜுனர்
Answer: A / விடை: A
111. Atisha was the head of which monastery?
111. அதிசா எந்த மடாலயத்தின் தலைவராக இருந்தார்?
A) Nalanda Monastery நாலந்தா மடாலயம்
B) Vikramasila Monastery விக்ரமசீலா மடாலயம்
C) Vallabhi Monastery வல்லபி மடாலயம்
D) Taxila தட்சசீலம்
Answer: B / விடை: B
112. What is the unique school of art that developed under Pala patronage called?
112. பாலர்களின் ஆதரவால் உருவான தனித்தன்மை வாய்ந்த புதிய பாணியைக் கொண்ட கலைப்பள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) Western Indian Art மேற்கு இந்தியக் கலை
B) Gandhara Art காந்தாரக் கலை
C) Pala Art or Eastern Indian Art பாலர்களின் கலை (அ) கிழக்கு இந்தியக் கலை
D) Mathura Art மதுரா கலை
Answer: C / விடை: C
113. With whom is the festival of Raksha Bandhan associated?
113. ரக்‌ஷாபந்தன் எனும் விழாவானது யாருடன் தொடர்புடையது?
A) Mughals முகலாயர்கள்
B) Marathas மராத்தியர்கள்
C) Cholas சோழர்கள்
D) Rajputs ராஜபுத்திரர்கள்
Answer: D / விடை: D
114. What does the word 'Raksha Bandhan' mean?
114. ரக்‌ஷாபந்தன் என்பதன் பொருள் என்ன?
A) War and Peace போர் மற்றும் அமைதி
B) Brotherhood சகோதரத்துவம்
C) Raksha-protection, Bandhan-tying/relationship ரக்‌ஷா-பாதுகாப்பு, பந்தன்-கட்டுதல் (அ) உறவு
D) Expression of valor வீரத்தின் வெளிப்பாடு
Answer: C / விடை: C
115. Who celebrated the Raksha Bandhan festival on a large scale during the Partition of Bengal in 1905?
115. 1905 ல் வங்கப்பிரிவினையின் போது ரக்‌ஷாபந்தன் விழாவை பெருமளவில் நடத்தியவர் யார்?
A) Bal Gangadhar Tilak பாலகங்காதர திலகர்
B) Rabindranath Tagore ரவீந்திரநாத் தாகூர்
C) Subhas Chandra Bose சுபாஷ் சந்திர போஸ்
D) Mahatma Gandhi மகாத்மா காந்தி
Answer: B / விடை: B
116. Why did Tagore organize the Raksha Bandhan festival in 1905?
116. 1905 ல் தாகூர் எதற்காக ரக்‌ஷாபந்தன் விழாவை பெருமளவில் நடத்தினார்?
A) To oppose the British ஆங்கிலேயர்களை எதிர்க்க
B) To promote Swadeshi movement சுதேசி இயக்கத்தை வளர்க்க
C) For Hindu-Muslim unity இந்து, முஸ்லீம் ஒற்றுமைக்காக
D) To support farmers விவசாயிகளை ஆதரிக்க
Answer: C / விடை: C

Theme 4: Advent of Islam & Early Invasions / இஸ்லாமியர்களின் தோற்றம் மற்றும் படையெடுப்புகள்

117. Where did Islam originate?
117. இஸ்லாம் எங்கு தோன்றியது?
A) Egypt எகிப்து
B) Turkey துருக்கி
C) Mecca in Arabia அராபியாவிலுள்ள மெக்காவில்
D) Persia பாரசீகம்
Answer: C / விடை: C
118. Who founded Islam?
118. இஸ்லாமை தோற்றுவித்தவர் யார்?
A) Abu Bakr அபுபக்கர்
B) Umar உமர்
C) Ali அலி
D) Prophet Muhammad இறைதூதர் முகமது நபிகள் நாயகம்
Answer: D / விடை: D
119. What is the meaning of the word 'Khalifa' (Caliph)?
119. கலீஃபா என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
A) King அரசர்
B) Commander படைத்தளபதி
C) Representative of Prophet Muhammad இறைதூதர் முகமது நபிகளின் பிரதிநிதி
D) Priest மதகுரு
Answer: C / விடை: C
120. Who was the Turkish governor who made Ghazni his capital?
120. கஜினியை தலைநகராகக் கொண்ட துருக்கிய ஆளுநர் யார்?
A) Mahmud மாமூது
B) Subuktigin சுபக்டிஜின்
C) Alptigin அல்ப்-டஜின்
D) Muhammad Ghori கோரி முகமது
Answer: C / விடை: C
121. Who was the son of Subuktigin?
121. சுபக்டிஜினின் மகன் யார்?
A) Mahmud of Ghazni கஜினி மாமூது
B) Muhammad Ghori முகமது கோரி
C) Iltutmish இல்துமிஷ்
D) Aibak ஐபக்
Answer: A / விடை: A
122. Who was the Umayyad general who invaded Sind in 712 AD?
122. கி.பி. 712 ஆம் ஆண்டு சிந்துவின் மீது படையெடுத்த உமையது அரசின் படைத்தளபதி யார்?
A) Muhammad Ghori முகமது கோரி
B) Muhammad bin Qasim முகமது பின் காசிம்
C) Mahmud of Ghazni கஜினி மாமூது
D) Qutb-ud-din Aibak குத்புதீன் ஐபக்
Answer: B / விடை: B
123. Who was defeated and killed by Muhammad bin Qasim?
123. முகமது பின் காசிமால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் யார்?
A) Jayapala ஜெயபாலர்
B) Anandapala ஆனந்தபாலர்
C) Dahir, King of Sind சிந்துவின் அரசர் தாகிர்
D) Prithviraj பிருதிவிராஜ்
Answer: C / விடை: C
124. From where did the Arabs learn about zero and chess?
124. அரேபியர்கள் பூஜ்யியம், சதுரங்கத்தை எங்கிருந்து கற்றுக்கொண்டனர்?
A) China சீனா
B) Greece கிரீஸ்
C) Egypt எகிப்து
D) India இந்தியா
Answer: D / விடை: D
125. Who discovered the concept of zero?
125. பூஜ்யியத்தை கண்டறிந்தவர்கள் யார்?
A) Arabs அராபியர்கள்
B) Greeks கிரேக்கர்கள்
C) Indians இந்தியர்கள்
D) Chinese சீனர்கள்
Answer: C / விடை: C